கர்ப்பிணியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

குள்ளஞ்சாவடி : கர்ப்பிணியை தாக்கிய, 2 பெண்கள் உட்பட, 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்

குள்ளஞ்சாவடி அடுத்த கம்பளிமேட்டைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் மனைவி பார்கவி, 30. இவர் நேற்று முன்தினம் மேல்பூவாணிக்குப்பத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன் உட்பட 3 பேர், முன்விரோதம் காரணமாக பார்கவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார், ஜெகன், சரிதா உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement