'தினமலர்' வீட்டு உபயோக பொருட்கள், நுகர்வோர் கண்காட்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ.,வில் கோலாகல துவக்கம்; பார்வையாளர்கள் உற்சாகம்


சென்னை: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், 'தினமலர்' வீட்டு உபயோகப் பொருட்கள், நுகர்வோர் கண்காட்சி, நேற்று (ஆகஸ்ட் 01) கோலாகலமாக துவங்கியது. கண்காட்சியை செயின்ட் தாமஸ் மவுன்ட் போக்குவரத்து துணை கமிஷனர் குமார் மற்றும் சின்னத்திரை நடிகை நந்தினி ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.


'தினமலர்' நாளிதழ் மற்றும் 'சத்யா' நிறுவனம் சார்பில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், வீட்டு உபயோகப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று துவங்கியது. நாளை மறுநாளான, 4ம் தேதி வரை நடக்க உள்ள இந்த கண்காட்சியில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் பலவகை பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
250 அரங்குகள் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், குளிர்சாதனை வசதியுடன், 250க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், வீட்டுக்கு தேவையான, 'ஏசி, வாஷிங் மிஷின்' உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட பர்னிச்சர் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், சமையலறை, குளியலறை, படுக்கையறை சார்ந்த பொருட்கள் என, அனைத்து விதமான பொருட்களும் இடம் பெற்றுள்ளன.



தமிழகத்தில் உள்ள முன்னணி நிறுவனங்கள், 'ஆன்லைன்' விற்பனை நிலையங்கள் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, உத்தர பிரதேசம் , மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநில கைவினைஞர்களின் உற்பத்தி பொருட்களும் குவிந்துள்ளன.
பெண்களுக்குத் தேவையான அழகு சாதனப் பொருட்கள், நகைகள், உடைகள் உள்ளிட்டவை மனங்கவரும் வகையில் விற்பனைக்கு வந்துள்ளன.


சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்களும் குவிந்துள்ளன. உபயோகப்பொருட்கள் 'சத்யா' நிறுவன அரங்கில், 'ஏசி வாஷிங் மிஷின்' மின் விசிறிகள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள், மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றுக்கு, ஆடி சிறப்பு தள்ளுபடியுடன், கூடுதல் சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. வாகனங்கள் பல்வேறு நிறுவனங்களின் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், சலுகை விலையில் விற்பனைக்கு வந்துள்ளன.


கல்லில் கலைவண்ணம் வழவழப்பான ராஜஸ்தான் மார்பிள் கல்லில் செதுக்கப்பட்ட கிண்ணங்கள், பெட்டிகள், சோப்ரா, சவுக்கி, லேண்டர்ன், லோட்டா, மொபைல் ஹோல்டர், பென் ஹோல்டர், போட்டோ பிரேம், தட்டுகள், மெழுவர்த்தி ஸ்டாண்ட், லேண்டர்ன் விளக்குகள் உள்ளிட்ட வெண்மை பளிச்சிடும் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.


வெண்பளிங்கு சிலைகளாக சிங்கம், யானை உள்ளிட்ட அலங்கார சிலைகள், தாஜ்மஹால் உள்ளிட்ட திருமணப் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை, 2,000 ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை விற்பனைக்கு வந்துள்ளன. முக்கியமாக வாசல் நிலைகளை அலங்கரிக்கும் கஜலட்சுமி, ராமர் பட்டாபிஷேக சிற்பங்கள், பூஜையறையில் வைக்கும் பெருமாளின் தசாவதாரம், அனுமன் உள்ளிட்ட சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.


அதேபோல், சாப்பாட்டு மேஜை, நாற்காலி, ஊஞ்சல், சோபா, டீப்பாய், பார் டேபிள், '3 இன் 1' ஸ்டாண்ட் உள்ளிட்ட அறை பயன்பாடு பொருட்களும் விதவிதமாக விற்பனைக்கு வந்துள்ளன.கண்ணாடி கண்ணாடியால் செய்யப்பட்ட குடிநீர் டம்ப்ளர்கள், மதுக்குவளைகள், எண்ணெய் ஜாடிகள், பாத்திரங்கள் உள்ளிட்டவை அழகழகாக விற்பனைக்கு வந்துள்ளன.



ஆடை திருப்பூர், கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட தமிழக மாவட்ட தயாரிப்புகளான ஆடைகள் விதவிதமாக விற்பனைக்கு வந்துள்ளன. மேலும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பல வண்ணங்களில் ஆடைகள் விற்பனைக்கு வந்துள்ளன.


பெண்களுக்கான கைத்தறி, களம்காரி உள்ளிட்ட புடவைகள், சுடிதார் துணிகள், ரெடிமேட் ஆடைகள், குழந்தைகளுக்கான பிராக், மிடி உள்ளிட்டவற்றுடன், ஆண்களுக்கான பேன்ட், டி-ஷர்ட், சட்டைகள், வேட்டிகள் உள்ளிட்டவையும், புதிய டிசைன்களில் விற்பனைக்கு வந்துள்ள ன.


@quote@ 'ஆன்லைனில்' கிடைக்கும் பொருட்களை நேரில் பார்த்து வாங்கியதில் மகிழ்ச்சி பார்வையாளர்கள் குதுாகலம் எதிர்பார்த்ததை விட, கண்காட்சி மிக சிறப்பாக உள்ளது. இதில், 200க்கும் மேற்பட்ட அரங்குகள் இருப்பதால், கண்காட்சி பார்ப்பதற்கு கடல் போல் உள்ளது. ஒவ்வொரு கடையையும் பார்க்கும்போது, பொருட்கள் வாங்க ஆர்வம் அதிகரிக்கிறது. ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநில ஆடை ரகங்கள் முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள், ஒரே இடத்தில் கிடைப்பது வியப்பாக உள்ளது. - கே.என். ராஜன், வில்லிவாக்கம் quote



@quote@வெளிச்சந்தையை விட, இங்கு விலை குறைவாக உள்ளது. வெளியில், 3,800 ரூபாய்க்கு விற்கப்படும், 'ஹேண்ட் பேக்' இங்கு, 2,500 ரூபாயில் கிடைக்கிறது. பெரும்பான்மையான அரங்குகளில், 20 முதல் 35 சதவீதம் தள்ளுபடி வழங்குவது, கூடுதல் சிறப்பு. வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில், கண்காட்சி உள்ளது. - அம்பிகா, வில்லிவாக்கம்quote


@quote@தினமலர் இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் விளம்பரம் பார்த்து, கண்காட்சிக்கு குடும்பத்துடன் வந்தோம். பொருட்களின் விலை நியாயமாக உள்ளது. ராஜஸ்தான் கம்பளம், ஆடைகள் என, வீட்டிற்கு தேவையானவற்றை வாங்கி உள்ளோம். 'ஆன்லைனில்' மட்டும் கிடைக்கும் ஒளிரும் வகை இரவு விளக்குகளை, நேரில் பார்த்து வாங்கியதில் கூடுதல் மகிழ்ச்சி. - ரம்யா, நங்கநல்லுார் quote


@quote@கண்காட்சியில் ஆயுர்வேத மூலிகைகள், தைலம், சிறுதானிய உணவு பொருட்கள் மற்றும் விதை வகைகள், என, இயற்கை சார்ந்த, பல்வேறு பொருட்கள் இடம் பெற்றுள்ளன. நீண்ட நாட்களாக தேடிய, சில மூலிகை தைலம் மற்றும் விதைகளை இங்கு வாங்கியதில் மகிழ்ச்சி. - ஞானாம்பிகை, சென்னைquote


@block_P@

'தினமலர்' வாசகர்களுக்கு 'ஜாக்பாட்' @

@ரூ.2,000 சந்தாவுக்கு ரூ.11 லட்சம் காப்பீடு வாசகர்களே, 'தினமலர்' நாளிதழை பெறுவதற்கான, 1,999 ரூபாய் ஆண்டு சந்தா தொகையை, நம் நாளிதழ் அரங்கில் செலுத்தினால், 'தாமரை பிரதர்ஸ் மீடியா' பதிப்பித்துள்ள, 1,000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை இலவசமாக பெறலாம். அதுமட்டுமல்ல, 11 லட்சம் ரூபாய்க்கான விபத்து, வீட்டு உடைமை, மருத்துவ காப்பீட்டையும் பெறலாம்.block_P

Advertisement