கடலுாரில் 100.2 டிகிரி வெயில் பதிவு

கடலுார் : கடலுாரில் வெயில் 100.2 டிகிரியை கடந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

தமிழகத்தில் கோடை காலம் முடிந்து 2 மாதங்களாகிவிட்டன. இருப்பினும், வெயில் கட்டுக்கடங்காத நிலையில் நீடித்து வருகிறது. நேற்று காலையில் இருந்தே மேற்கு திசையில் காற்று வீசியது. அதன் விளைவாக 100.2 டிகிரி வெப்பம் பதிவானது.

பகல் பொழுதில் கடும் வெப்பம் வாட்டி வதைத்தது. சாலைகளில் வெப்ப அலை வீசியதால் மக்கள் நடமாட்டம் குறைந்தது. இந்த நாட்களில் 'ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்' என்பார்கள். அந்தளவுக்கு காற்றின் வேகம் அதிகரிக்கும்.

ஆனால் தற்போது காற்றுக்கு பதிலாக வெயில் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வானிலையாளர் பாலமுருகன் கூறுகையில், 'இதற்கு முன்பு கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதத் தில் 100 டிகிரி வெயில் பதிவானது. நாளை (இன்று) முதல், 2 நாட்களுக்கு மழை பெய்யும்' என்றார்.

Advertisement