போலீசாருக்கே மிரட்டல் விடுத்த ரவுடி கும்பல்; அதிர்ச்சி வீடியோ வெளியிட்டு அண்ணாமலை வருத்தம்

14

சென்னை: போலீசாரை ரவுடி கும்பல் மிரட்டல் விடுக்கும் வீடியோவை வெளியிட்டு,"திமுக ஆட்சியில் இந்த ரவுடிகள் தான் ஆட்சி செய்கிறார்கள்,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


@1brசென்னை அண்ணா நகரை சேர்ந்த ராபர்ட், கொலை, கொலை முயற்சி, வழிப்பறி என 16 வழக்குகள் தொடர்புள்ள பிரபல ரவுடி. கடந்த பிப்ரவரி மாதம் ராபர்ட்டை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக 6 பேர் போலீசில் சரண் அடைந்தனர். மேலும் சிலரை போலீசார் கைது செய்தனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்ட கொலையாளிகளின் காவலை நீட்டிக்க, சென்னை எழும்பூர் நீதிமன்றத்திற்கு, பலத்த பாதுகாப்புடன் வேனில் போலீசார் அழைத்து வந்தனர். காவல் நீட்டிக்கப்பட்ட பிறகு மீண்டும் போலீஸ் வேனில் சிறைக்கு புறப்பட்டனர்.


அப்போது வெளியே இருந்த ஒருவன் கஞ்சா பொட்டலத்தை, பந்து போல் உருட்டி போலீஸ் வேனுக்குள் இருந்த ரவுடிகளிடம் வீசினான். இதை பார்த்த போலீசார் அந்த நபரை தாக்கினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கொலை வழக்கு கைதிகள், தாக்கிய போலீசை அடிக்க பாய்ந்தனர். பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தனர்.

‛உன் மூஞ்ச பார்த்து வச்சிருக்கோம் விடமாட்டோம். நாங்களாம் கொலைக்கு மேல கொலை பண்றவங்க'ணு சொல்லி வேனுக்குள் அடாவடி செய்தனர். அவர்களை போலீசாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஓடும் வேனில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி வெளியாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வீடியோவை வெளியிட்ட பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக அரசை சாடினார். இது குறித்த அவர் கூறியதாவது:


@twitter@https://x.com/annamalai_k/status/1951175028583833640?t=LMqJth6W9YL7yZLGJnQ54g&s=19twitter

திமுக ஆட்சியில் இந்த ரவுடிகள் தான் ஆட்சி செய்கிறார்கள். போலீசில் வேனில் கொண்டு செல்லும் போது, போலீசாரையே ரவுடிகள் மிரட்டி அடிக்கப் பாய்வது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீது எந்த பயமும் இல்லை என்பதை தான் வீடியோ காட்டுகிறது. உண்மையிலேயே இந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.


மற்றொரு பதிவில் அண்ணாமலை கூறி இருப்பதாவது:


பெரம்பலூர் கொளத்தூரில் உள்ள சுந்தரமூர்த்தி அய்யனார் கோவிலில் இருந்து ஒரு உண்டியலை திமுக நிர்வாகி துணைவேந்தன் தூக்கியபோது வீடியோவில் சிக்கியுள்ளார்.


முரண்பாடாக, இந்த உண்டியலை மனிதவளத் துறை நிறுவவில்லை, மாறாக துணைவேந்தன் தானே நிறுவினார். அதிகாரிகள் இறுதியாக அதை சீல் வைக்க நடவடிக்கை எடுத்தபோது, அவர் மிரட்டல் விடுத்து உண்டியலையும் பக்தர்களின் காணிக்கைகளையும் எடுத்துச் சென்றார்.



@twitter@https://x.com/annamalai_k/status/1951217136816496927?t=ZYleacvnIRk9IdLbds78XA&s=19 twitter


திமுக ஆட்சியின் கீழ், கோவில்கள் கூட அரசியல் கொள்ளையிலிருந்து தப்பவில்லை. இதை நாங்கள் சுட்டிக்காட்டுவது இது முதல் முறை அல்ல. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement