ரூ.15 ஆயிரம் சம்பளம் வாங்கிய கிளார்க்கிற்கு ரூ.30 கோடி சொத்து : லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிர்ச்சி

பெங்களூரு: கர்நாடகாவில் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வாங்கிய முன்னாள் கிளார்க் வீட்டில் நடந்த ரெய்டில், அவர் முறைகேடாக சேர்த்த ரூ.30 கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கர்நாடகாவில் அரசு அதிகாரிகள் முறைகேடாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதன்படி ஹாசன், சிக்பல்லாப்பூர், சித்ரதுர்கா மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு அதிகாரிகள், பொறியாளர்கள், ஊழியர்கள் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்தது.
இந்நிலையில், கர்நாடக ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித்துறையில் கிளார்க் ஆக கோப்பல் மாவட்டத்தில் பணியாற்றிய கலகப்பா நிடகண்டி வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்தினர். மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் பெற்ற அவர் வீட்டில், ரூ.30 கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவரது பெரில் 24 வீடுகள், 4 அடுக்குமாடி குடியிருப்புகள், 40 ஏக்கர் விவசாய நிலங்கள் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
நான்கு வாகனங்கள், 350 கிராம் தங்கம், 1.5 கிலோ வெற்றி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரது பெயரில் மட்டுமல்லாமல், சகோதர், சகோதர் பெயரிலும் சொத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நிடாகண்டியும், முன்னாள் பொறியாளர் சின்சோல்கரும் சேர்ந்து முடிக்கப்படாத திட்டங்களில், போலி ஆவணங்களை பயன்படுத்தி ரூ.72 கோடி மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.














மேலும்
-
ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை நிறுத்திய இந்தியா; நல்ல நடவடிக்கை என டிரம்ப் வரவேற்பு
-
உலகின் டாப் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியல் வெளியீடு; தொடர்ந்து முதலிடத்தில் மஸ்க்
-
'தினமலர்' வீட்டு உபயோக பொருட்கள், நுகர்வோர் கண்காட்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ.,வில் கோலாகல துவக்கம்; பார்வையாளர்கள் உற்சாகம்
-
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம்
-
கர்ப்பிணியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
-
கடலுாரில் 100.2 டிகிரி வெயில் பதிவு