71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: ' பார்க்கிங் ' படத்துக்கு 3 தேசிய விருது

2

புதுடில்லி: கடந்த 2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தமிழில் வெளியான 'பார்க்கிங்' படத்துக்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. சிறந்த படம், சிறந்த திரைக்கதைக்காக இந்த படம் தேர்வாகியது. மேலும், இதில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகர் விருதை பெறுகிறார்.


@1brசினிமாத்துறையில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்து விளங்கும் கலைஞர்களை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு,தேசிய விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்திய சினிமாத்துறையில் இந்த விருது உயரிய விருதாக கருதப்படுகிறது. 2023ம் ஆண்டுக்கான 71வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பல வாரங்களாக நடந்த ஆலோசனைக்கு பிறகு பட்டியலை நடுவர் குழு, தேர்வுக்குழுவிடம் அளித்தது. இதன்படி இந்த விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.



@block_B@ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய தமிழ் படமான 'பார்க்கிங்' படம் சிறந்த திரைப்படமாக தேர்வானது. இந்தப்படத்தில் ஹரீஸ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறந்த திரைக்கதைக்கான விருதையும் இந்த படம் பெறுகிறது. இந்தப் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதை பெறுகிறார்block_B


Non feature film பிரிவில் தமிழ் ஆவணப்படமான லிட்டில் விங்ஸ் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது.சரவண மருது சவுந்திரப்பாண்டி, மீனாட்சி சோமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.


'தி டைம்லெஸ் தமிழ்நாடு' என்ற ஆங்கிலப்படத்துக்கு விருது சிறந்த கலை கலாசார படத்துக்கான தேசிய விருது


சிறந்த மலையாள படம்: உள்ளொழுக்கு


சிறந்த இசையமைப்பாளர் - ஜிவி பிரகாஷ்குமார்( வாத்தி படம்)





சிறந்த துணை நடிகர் - எம்.எஸ்.பாஸ்கர்


சிறந்த தெலுங்கு படம்: பகவந்த் கேசரி


சிறந்த ஒளிப்பதிவு: கேரள ஸ்டோரி


சிறந்த நடிகர்: ஷாருக்கான் ( ஜவான்)




12th fail படத்தில் நடித்ததற்காக விக்ராந்த் மாசி, சிறந்த நடிகர் விருதை பெறுகிறார்.

Advertisement