ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவுக்கு அனுமதி உண்டா: வெளியானது புதிய அறிவிப்பு

சென்னை; ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு கிடையாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.



அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி மாதம் என்றாலும் பொதுவாக இந்த மாதத்தில் பத்திரப்பதிவுகள் குறைவாகவே இருக்கும். ஆனால் ஆடிப்பெருக்கு நாளில் சற்றே மாற்றத்தை காணும் வகையில் அந்நாளில் மட்டும் பத்திரப்பதிவு நடக்கும். அதனால் அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.


நாளைய தினம்(ஆக.3) ஆடிப்பெருக்கு என்பதோடு ஞாயிற்றுக்கிழமையும் கூட. ஆகையால் அன்று பத்திரப்பதிவு நடக்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


கடந்த பிப்.2ம் தேதி முகூர்த்த நாளில் இதேபோன்று பத்திரப்பதிவு நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட இருந்தது. ஆனால் அன்று ஞாயிறு என்பதால், ஊழியர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், அன்று பணிக்கும் அவர்கள் வரவில்லை.


இம்முறை நாளை ஞாயிறு, ஆடிப்பெருக்கு என்ற போதிலும் முன்னரே பத்திரப்பதிவு கிடையாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது, குறிப்பிடத்தக்கது.

Advertisement