ஏட்டிக்கு போட்டி: ராமதாசுக்கு போட்டியாக பொதுக்குழு கூட்டத்துக்கு அன்புமணி அழைப்பு

1

சென்னை: ஆக.17ம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வரும் 9 ம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அன்புமணி தரப்பு அறிவித்துள்ளது.



பாமகவில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. கட்சியில் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு, நிர்வாகிகள் நீக்கம், சேர்ப்பு என புதிய, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.


இருவருக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வரும் வரும் சூழலில், பாமகவின் தலைமை அலுவலகம் என்று அன்புமணி அலுவலகத்தின் முகவரியை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருந்தது. இது ராமதாசை அதிர்ச்சிக்கு ஆளாக்கியதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் ஆக.17ம் தேதி நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார்.


சிறப்பு பொதுக்குழுவில் கட்சியின் தற்போதைய நிலை, அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.



இந்நிலையில், ராமதாசுக்கு போட்டியாக வரும் 9ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அன்புமணி தரப்பை சேர்ந்த வடிவேல் ராவணன் அறிவித்துள்ளார்.

Advertisement