அயர்லாந்தில் இந்தியர்கள் மீது கொடூர தாக்குதல்; எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

டப்ளின்: அயர்லாந்தில் இரண்டு இந்தியர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அங்கு வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.
அயர்லாந்தின் டப்ளினில் 32 வயது இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்தோஷ் யாதவைஆறு இளைஞர்கள் தாக்கியதில் அவரது கன்னத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. முன்னதாக,
டல்லாட்டில் இந்தியர் ஒருவர் மீது மர்ம நபர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தியதுடன், அவரது ஆடையை களைந்து கொடுமைப்படுத்தினர்.
இது இனவெறி காரணமாக நடந்ததா என விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், அயர்லாந்தில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அயர்லாந்தில் இந்திய குடிமக்களுக்கு எதிரான உடல் ரீதியான தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக அயர்லாந்து அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்பில் உள்ளது. அதே நேரத்தில், அயர்லாந்தில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், வெறிச்சோடிய பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறோம். டப்ளினில் உள்ள இந்திய தூதரகத்தினை
தொலைபேசி: 08994 23734,
மின்னஞ்சல்: cons.dublin@mea.gov.in வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


மேலும்
-
ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவுக்கு அனுமதி உண்டா: வெளியானது புதிய அறிவிப்பு
-
ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை நிறுத்திய இந்தியா; நல்ல நடவடிக்கை என டிரம்ப் வரவேற்பு
-
உலகின் டாப் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியல் வெளியீடு; தொடர்ந்து முதலிடத்தில் மஸ்க்
-
'தினமலர்' வீட்டு உபயோக பொருட்கள், நுகர்வோர் கண்காட்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ.,வில் கோலாகல துவக்கம்; பார்வையாளர்கள் உற்சாகம்
-
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம்
-
கர்ப்பிணியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு