மக்களை சந்தித்தால் நோய் இருந்தாலும் குணம் ஆகிவிடும்; முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ''மக்களை சந்தித்தால் தான் எனக்கு, உற்சாகம் வரும். எனது உடலில் ஏதாவது நோய் இருந்தாலும் நல்லா ஆகிடும்'' என முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.
'நலம் காக்கும் ஸ்டாலின்' என்கிற பெயரில் சிறப்பு மருத்துவ முகாம், தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது. சென்னையில் நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு, நேற்று முன் தினம், தலைமை செயலகம் அலுவலகத்திற்கு சென்று எனது வழக்கமான பணியை தொடங்கினேன்.
உற்சாகம் வரும்!
அப்போது எனது செயலாளர்கள் வெளி நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்க சொன்னார்கள். அது எல்லாம் தள்ளி வைக்க வேண்டாம். மக்களை சந்தித்தால் தான் எனக்கு, உற்சாகம் வரும். எனது உடலில் ஏதாவது நோய் இருந்தாலும் நல்லா ஆகிடும். எனவே மக்களி பணி செய்தால், எனது உடல் நலத்தை கொடுத்துடும் என்று சொல்லி தான் இங்கு வந்து இருக்கிறேன்.
மக்களின் நலன்
மருத்துவமனையில் இருந்துவிட்டு வந்த பிறகு, கோட்டைக்கு வெளியே நான் கலந்து கொண்டு பேசும் முதல் நிகழ்ச்சி இது. நாட்டு மக்களின் நலன் காக்கக்கூடிய நிகழ்ச்சி. நாட்டு மக்களுடைய நலன் தான் என்னுடைய நலன்.
https://www.youtube.com/watch?v=d1te2II2A8c
@quote@நம் ஆட்சி பொறுப்புக்கு வந்த போது, என்ன நிலை இருந்தது என்று யாரும் மறந்து இருக்க மாட்டீர்கள். கொரோனா 2வது அலை, ஆம்பூலன்ஸ் தட்டுப்பாடு, ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு என தமிழகம் நெருக்கடியில் தவித்து கொண்டு இருந்தது. quote
நான் உட்பட எல்லா அமைச்சர்களும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராகவே மாறிவிட்டோம். தடுப்பூசி எல்லோரும் போடுவதை உறுதி செய்தோம். கொரோனா நேரத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்க கூடாது என்று ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 2 தவணையாக ரூ.4 ஆயிரம் கொடுத்தோம். கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தி இது தான் மக்களை காக்கும் அரசு என்று நிரூபித்தோம்.
இரண்டு கண்கள்
கல்வியும், மருத்துவமும் இந்த ஆட்சியின் இரண்டு கண்கள் என்று சொல்லி, மருத்துவத்திற்கு ஏராளமான திட்டங்களை தொடங்கி இருக்கிறோம். எல்லோருக்கு உடலில் சின்னச்சின்ன பிரச்னைகள் இருக்கும். அதற்காக அவரை நோயாளி என்று கூறக்கூடாது. நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு வருவோரை மருத்துவ பயனாளிகளாகவே பார்க்க வேண்டும்.
அக்கறை
குடும்பத்தில் ஒருவரைக் கவனிப்பது போல், முகாமிற்கு வரும் மக்களை மருத்துவப் பணியாளர்கள் அக்கறையுடன் கவனிக்க வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். அப்படி நம்முடைய உடல் நலமாக இருந்தால் தான் மகிழ்ச்சி உடன் வாழ முடியும். உழைக்க முடியும், சாதிக்க முடியும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.









மேலும்
-
போதைப்பொருள் கலாசாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்; இபிஎஸ் வேண்டுகோள்
-
சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் சிபிஎஸ்இ அதிகாரி சடலமாக மீட்பு
-
பாலியல் வழக்கு; பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
ஆபத்திலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டும் : ராகுலை எச்சரித்த ராஜ்நாத்சிங்
-
ஹிமாச்சல் மாநிலம் காணாமல் போகும்: எச்சரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
-
வாக்காளர் பட்டியலில் என் பெயரை காணோம்; புலம்பிய தேஜஸ்வி... தேர்தல் ஆணையம் பதிலடி