'நம் உள்ளத்தை நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டும்'

கோவை:
கோவை திவ்யோதயா சர்வ சமய மையம் சார்பில், பாதிரியார் ஜான் பீட்டர் அமைதி மற்றும் நல்லிணக்க விருது வழங்கும் விழா, கீதா ஹால் ரோட்டில் உள்ள திவ்யோதயா அரங்கில் நேற்று மாலை நடந்தது.
விழாவுக்கு, பாதிரியார் சஜு சக்கலக்கல் தலைமை வகித்தார். இந்த ஆண்டுக்கான பாதிரியார் ஜான் பீட்டர் அமைதி மற்றும் நல்லிணக்க விருது, பாரதீய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயருக்கு வழங்கப்பட்டது.
விழாவில், கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசியதாவது: இந்த சமூகம் புறத்தோற்றத்தில் எப்படி இருந்தாலும், நம் உள்ளத்தை நல்லபடியாக வைத்துக் கொள்ள வேண்டும். விவேகானந்தரிடம் ஒரு இளைஞர், 'சுவாமி, இங்கு எல்லாமே தவறாக இருக்கிறது, இதை எப்படி மாற்றுவது' என்று கேட்டார். அதற்கு அவர், 'உனக்குள் மாற்றம் ஏற்பட்டால் மற்றவை எல்லாம் மாறும்' என்றார். அந்த மாற்றத்துக்கான நம்பிக்கையோடு நாம் பயணப்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
சாந்தி ஆஷ்ரம் தலைவர் கேசவினோ அறம், முன்னாள் ரோட்டரி இன்டர்நேஷனல்- மாவட்ட கவர்னர் குரியச்சன், திவ்யோதயா இயக்குனர் வில்சன் சக்யாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
ராசிபுரம் அருகே கார் பட்டறையில் தீ விபத்து: 7 கார், 2 டூவீலர் சேதம்
-
ராசிபுரத்தில் நாயன்மார்கள் திருவீதி உலா
-
அருண் ஜெட்லி மிரட்டியதாக ராகுல் அபாண்டம் பகிரங்க மன்னிப்பு கோர பா.ஜ., வலியுறுத்தல்
-
சாலையில் மண் குவியல் வாகன ஓட்டிகள் அச்சம்
-
குண்டுமல்லி விலை உயர்வு
-
பிரதமரின் கிசான் சம்மான் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு