100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

குளித்தலை, குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் அலுவலகம், தரகம்பட்டியில் நேற்று காலை பாலவிடுதி, முள்ளிப்பாடி, கடவூர், மாவத்துார் பஞ்., ஊர் மக்கள், 100 நாள் வேலை கேட்டு யூனியன் கமிஷனரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.

மாவட்ட குழு உறுப்பினர் வேல்முருகன் தலைமையில், மனுக்கள் அளிக்கப்பட்டன. முன்னதாக மனு கொடுக்கும் போராட்டம், கடவூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து பேரணியாக துவங்கியது. யூனியன் அலுவலகம் முன், மக்களுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் வழங்காததை கண்டித்தும், தொடர்ந்து பலமுறை புகார் தெரிவித்தும் யூனியன் நிர்வாகம் கண்டும் காணாமல் உள்ளதை கண்டித்தும், கண்டன கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து, 100 நாள் வேலை வழங்க கோரி யூனியன் கமிஷனர் சுரேஷ்குமாரிடம் அகில இந்திய விவசாயி தொழிலாளர் சங்கம் சார்பில் மனு வழங்கப்பட்டது.

Advertisement