ஆடிப்பெருக்கில் அட்டகாச பரிசு தங்கமயில் ஜூவல்லரி அறிவிப்பு

சென்னை:ஆடிப்பெருக்கு நாளில், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் வாங்குவோருக்கு அட்டகாசமான பரிசுகளை, தங்கமயில் ஜூவல்லரி அறிவித்துள்ளது.

மதுரையை தலைமையிடமாக வைத்து இயங்கி வரும், தங்கமயில் ஜூவல்லரிக்கு, மாநிலம் முழுதும், 64 கிளைகள் உள்ளன. ஆடிப்பெருக்கு நாளை முன்னிட்டு, சிறப்பு விற்பனையை, நாளை காலை 6:00 மணி முதல், தங்கமயில் ஜூவல்லரி நிறுவனம் துவக்க உள்ளது.

ஆடிப்பெருக்கு நாளில், நகைகள் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், வேதம் கற்ற ஆச்சாரியார்களால் சிறப்பு பூஜை செய்து, பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

வாடிக்கையாளர்கள் வாங்கும், 10 கிராம் தங்கத்திற்கு, அரை கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும், 50,000 ரூபாய்க்கு மேல் வாங்கும், வெள்ளி நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பரிசு பொருட்களுக்கு, 2,500 முதல் 10,000 ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது.

வைர நகைகள், 1 முதல் 5 கேரட்டிற்கு மேல் வாங்குவோருக்கு, ஒரு கிராம் முதல், 3 கிராம் வரை, தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட உள்ளது. வெள்ளி பொருட்கள் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வாங்குவோருக்கு, ஐபோன் 16 மொபைல் போன் பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பை, தங்கமயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Advertisement