தசராவுக்கான கஜ பயண ஏற்பாடுகள் தீவிரம்

மைசூரு; வரும் 4ம் தேதி தசரா யானைகள் கஜ பயணம் துவக்க விழாவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
மைசூரு தசராவை முன்னிட்டு, ஜம்பு சவாரியில் பங்கேற்கும் ஒன்பது யானைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த யானைகள், வரும் 4ம் தேதி மைசூரு வீரனஹொசஹள்ளி கிராமத்தில் இருந்து புறப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதுதொடர்பாக, மைசூரு வனத்தறை துணை அதிகாரி பிரபுகவுடா நேற்று அளித்த பேட்டி:
மைசூரு தசரா கஜ பயணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 4,000 முதல் 5,000 பேர் பங்கேற்கும் வகையில் பெரியளவில் விழா பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
முதல்வர் சித்தராமையா, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, மாவட்ட பொறுப்பு வகிக்கும் மஹாதேவப்பா உட்பட பலர் பங்கேற்றனர். அன்றைய தினம் நடக்கும் பூஜைகளை, மைசூரை சேர்ந்த அர்ச்சகர் பிரஹலாத் தலைமையிலான குழுவினர் செய்கின்றனர்.
கஜ பயணம் துவக்கி வைக்கப்பட்ட பின், யானைகள் லாரிகள் மூலம் மைசூருக்கு அழைத்துச் செல்லப்படும். அரண்மனை வளாகத்தில், யானைகளுக்கும், யானை பாகனங்கள், உதவியாளர்களின் குடும்பத்தினர் தங்குவதற்காக, தற்காலிக ஷெட்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இரண்டு நாட்களில் முடிவடைந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
தந்தையாக ஜெயித்த வைகோ அரசியல் தலைவராக தோற்று இருக்கிறார்: மல்லை சத்யா குற்றச்சாட்டு
-
பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது எப்படி?
-
தமிழகத்தில் பரவலாக பெய்தது கனமழை; கடலுாரில் அதிகம்!
-
மக்களை சந்தித்தால் நோய் இருந்தாலும் குணம் ஆகிவிடும்; முதல்வர் ஸ்டாலின்
-
பாகிஸ்தானில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது: 15 நாட்களில் 3வது விபத்து
-
காஷ்மீரில் 'ஆப்பரேஷன் அகல்' நடவடிக்கை; பயங்கரவாதி சுட்டுக்கொலை