சில்மிஷ தமிழாசிரியருக்கு சிறை ஹெச்.எம்., 3 பேர் மீது வழக்கு
இடைப்பாடி:மாணவியரிடம் சில்மிஷம் செய்த தமிழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்; உடந்தையாக இருந்ததாக, தலைமையாசிரியர், இரு உதவி தலைமையாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் மீது, 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் செந்தில் குமரவேல், 58. இவர், மாணவியரிடம் சில்மிஷம் செய்து வருவதாக புகார் எழுந்தது.
நேற்று முன்தினம், சேலம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் முரளி மற்றும் சங்ககிரி டி.எஸ்.பி., சிந்து விசாரித்தனர். தொடர்ந்து, மாணவியர் புகார்படி, செந்தில் குமரவேல், 58, மீது, போக்சோ வழக்கு பதிந்து, போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும், தலைமை ஆசிரியை சீதா, 54, உதவி தலைமை ஆசிரியைகள் ஜெயலட்சுமி, 41, மல்லிகா, 55, உடற்கல்வி ஆசிரியை விஜி, 46, ஆகியோர் மீது, குற்றவாளிக்கு உடந்தையாக குற்றத்தை மறைத்ததாக, போக்சோ வழக்கு பதிந்தனர்.
தலைமை ஆசிரியை உட்பட நான்கு பேரையும், சங்ககிரி மகளிர் போலீசார் ஜாமினில் விடுவித்தனர்.
மேலும்
-
தந்தையாக ஜெயித்த வைகோ அரசியல் தலைவராக தோற்று இருக்கிறார்: மல்லை சத்யா குற்றச்சாட்டு
-
பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது எப்படி?
-
தமிழகத்தில் பரவலாக பெய்தது கனமழை; கடலுாரில் அதிகம்!
-
மக்களை சந்தித்தால் நோய் இருந்தாலும் குணம் ஆகிவிடும்; முதல்வர் ஸ்டாலின்
-
பாகிஸ்தானில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது: 15 நாட்களில் 3வது விபத்து
-
காஷ்மீரில் 'ஆப்பரேஷன் அகல்' நடவடிக்கை; பயங்கரவாதி சுட்டுக்கொலை