சீன ராணுவம் 98வது ஆண்டு கொண்டாட்டம்

பீஜிங்:உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமாக நவீனமயமாக்கப்பட்டு வரும் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம், நேற்று 98வது ஆண்டு விழாவை கொண்டாடியது.

1927ல் அப்போதைய சீன தலைவர் சியாங் கை-ஷேக் அரசுக்கு எதிரான ஆயுதமேந்திய எதிர்ப்பின் போது, சீன கம்யூனிஸ்ட் கட்சியால் நிறுவப் பட்டது மக்கள் விடுதலை ராணுவம். இது உலகின் மிகப்பெரிய ராணுவப் படைகளில் ஒன்று. இது தரைப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் ஏவுகணைப்படை என நான்கு பிரிவுகளை உள் ளடக்கியது.

கடந்த 10 ஆண்டுகளில், சீன மக்கள் விடுதலை ராணுவத்தை உல களாவிய செல்வாக்கு மிக்க நிலைக்கு உயர்த்தும் நோக்கில் நவீனமயமான பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து, ராணுவத்துக்கு அதிகம் செலவழிக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தைச் சீனா பிடித்துள்ளது.

Advertisement