முன்னாள் அமைச்சர் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

விழுப்புரம்:அ.தி.மு.க., மாஜி அமைச்சர் சண்முகம் மீதான வழக்கு விசாரணை ஆக. 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பஸ் நிலையம் எதிரே 2023ல் அ.தி.மு.க., பொதுக் கூட்டம் நடந்தது.

இதில், தமிழக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து மாஜி அமைச்சர் சண்முகம், அவதுாறாக பேசியதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார்.

நேற்று நடந்த இவ்வழக்கு விசாரணையில், சண்முகம் ஆஜராகவில்லை. அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் இவ்வழக்குகளை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், விசாரணையை ஒத்திவைக்கும்படியும் மனு செய்தனர்.

இதையடுத்து விசாரணையை ஆக.29க்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி மணிமொழி உத்தரவிட்டார்.

Advertisement