தலைமை அலுவலகம்: ராமதாஸ்-அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்
சென்னை:பா.ம.க., தலைமை அலுவலகம் எது என்பது தொடர்பாக, ராமதாஸ், அன்புமணி ஆதர வாளர்கள் இடையே, கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
பா.ம.க.,வில் அப்பா, மகன் மோதல் நீடித்து வருகிறது. கட்சி நிறுவனர் ராமதாஸ், தைலாபுரம் தோட்டத்தில் இருந்தும், அன்புமணி, சென்னை பனையூரில் இருந்தும் செயல்பட்டு வருகின்றனர். பா.ம.க.,வுக்கு ஒரே தலைமை அலுவலகம். அது தைலாபுரத்தில் உள்ளது' என, சில நாட்களுக்கு முன்பு ராமதாஸ் கூறியிருந்தார்.
ஆனால், தற்போது தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள, அரசியல் கட்சிகள் பட்டியலில், பா.ம.க.,வின் தலைமை அலுவலகம், 10, திலக் தெரு, தி.நகர், சென்னை முகவரியில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அன்புமணி ஆதரவாளர் வழக்கறிஞர் பாலு அளித்த பேட்டி:
கடந்த 2022ல் பா.ம.க., தலைவராக அன்புமணி தேர்வு செய்யப்பட்டபோது, கட்சி தலைமை அலுவலகம், சென்னை, தி.நகர், திலக் தெரு முகவரியில்தான் இருந்தது. அதற்கு முன்பு, தேனாம்பேட்டை, நாட்டுமுத்து நாயக்கன் தெருவில் இருந்தது. எந்த காலத் திலும், தைலாபுரம் தோட்டம், பா,ம.க.,வின் தலைமை அலுவலகமாக இருந்தது இல்லை.
தி.நகர், திலக் நகர் தலைமை அலுவலகத்தை குறிப்பிட்டதன் வாயிலாக, பா.ம.க., தலைவராக அன்புமணி செயல்பட்டு வருவதை, தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது. கடந்த 2024 லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில், பா.ம.க., வேட்பாளர் களுக்கான 'பி' படிவத்தில், அன்புமணிதான் கை யெழுத்திட்டார். பொதுக்குழுவால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணிக்கு, கட்சியை வழிநடத்தும் அனைத்து அதிகாரமும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
தந்தையாக ஜெயித்த வைகோ அரசியல் தலைவராக தோற்று இருக்கிறார்: மல்லை சத்யா குற்றச்சாட்டு
-
பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது எப்படி?
-
தமிழகத்தில் பரவலாக பெய்தது கனமழை; கடலுாரில் அதிகம்!
-
மக்களை சந்தித்தால் நோய் இருந்தாலும் குணம் ஆகிவிடும்; முதல்வர் ஸ்டாலின்
-
பாகிஸ்தானில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது: 15 நாட்களில் 3வது விபத்து
-
காஷ்மீரில் 'ஆப்பரேஷன் அகல்' நடவடிக்கை; பயங்கரவாதி சுட்டுக்கொலை