அன்புமணியின் 2ம் கட்ட பயணம் ஆக.7ல் துவக்கம்; 9ல் பொதுக்குழு

சென்னை:பா.ம.க., தலைவர் அன்புமணி தன் இரண்டாம் கட்ட நடை பயணத்தை ஆக.7ம் தேதி துவக்குகிறார்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாளான ஜூலை 25ம் தேதி முதல், 'உரிமை மீட்க, தலைமுறை காக்க' என்ற முழக்கத் துடன், நடைபய ணத்தை அன்பு மணி துவக்கினார்.

ஆக.4ம் தேதி திருப்பத்துாரில் முதல் கட்ட பயணத்தை நிறைவு செய்கிறார். இரண்டாம் கட்ட பயணத்தை, ஆக. 7ம் தேதி துவக்குகிறார். அன்று முதல் ஆக. 18ம் தேதி வரை, நடைபயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக. 9 ல் பொதுக்குழு அன்புமணி மற்றும் பா.ம.க., பொதுச்செயலர் வடிவேல் ராவணன் அறிக்கை: 'பா.ம.க., பொதுக்குழு கூட்டம், ஆக.9 காலை 11:00 மணிக்கு, மாமல்லபுரத்தில் நடக்க வுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் தவ றா மல் கலந்து கொள்ள வேண்டும்' என கூறப் பட்டுள்ளது. ஆக.17ல், பொதுக்குழு கூட்டம் நடக்கும்' என, ராமதாஸ் நேற்று அறிவித்த நிலையில், பொதுக்குழு கூட்டத்தை, அன்புமணி கூட்டியுள்ளார்.

Advertisement