பா.ம.க., அலுவலகம் எது? ஆதரவாளர்கள் மோதல்

சென்னை : பா.ம.க., தலைமை அலுவலகம் எது என்பது தொடர்பாக, ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்கள் இடையே, கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
பா.ம.க.,வில் அப்பா, - மகன் மோதல் நீடித்து வருகிறது. கட்சி நிறுவனர் ராமதாஸ், தைலாபுரம் தோட்டத்தில் இருந்தும், அன்புமணி, சென்னை பனையூரில் இருந்தும் செயல்பட்டு வருகின்றனர். பா.ம.க.,வுக்கு ஒரே தலைமை அலுவலகம். அது தைலாபுரத்தில் உள்ளது' என, சில நாட்களுக்கு முன்பு ராமதாஸ் கூறியிருந்தார்.
ஆனால், தற்போது தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அரசியல் கட்சிகள் பட்டியலில், பா.ம.க.,வின் தலைமை அலுவலகம், 10, திலக் தெரு, தி.நகர், சென்னை முகவரியில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராமதாஸ் ஆதரவாளர்கள், அன்புமணி தரப்பினர் தேர்தல் கமிஷனுக்கு தவறான தகவல்களை தந்துள்ளதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக, அன்புமணி ஆதரவாளர் வழக்கறிஞர் பாலு அளித்த பேட்டி:
கடந்த 2022ல் பா.ம.க., தலைவராக அன்பு மணி தேர்வு செய்யப்பட்டபோது, கட்சி தலைமை அலுவலகம், சென்னை, தி.நகர், திலக் தெரு முகவரியில்தான் இருந்தது. அதற்கு முன்பு, தேனாம்பேட்டை, நாட்டுமுத்து நாயக்கன் தெருவில் இருந்தது. எந்த காலத்திலும், தைலாபுரம் தோட்டம், பா,ம.க.,வின் தலைமை அலுவலகமாக இருந்தது இல்லை.
தி.நகர், திலக் நகர் தலைமை அலுவலகத்தை குறிப்பிட்டதன் வாயிலாக, பா.ம.க., தலைவராக அன்புமணி செயல்பட்டு வருவதை, தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், தி.மு.க.,வையும் தமிழக அரசையும் மிகக் கடுமையாக எதிர்த்து தன்னுடைய பிரசார நடைப்பயணத்தில் பேசிக் கொண்டிருக்கும் அன்புமணிக்கு எதிராக, தமிழக முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு, நலம் விசாரித்திருக்கிறார் பா.ம.க., நிறுவனரும் அன்பு மணியின் தந்தையுமான ராமதாஸ்.
மேலும்
-
காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக்கொலை
-
திமுக நிர்வாகி கொலை; பழிக்கு பழியாக கொலையாளியின் தந்தை வெட்டிக்கொலை
-
எனது தந்தை ஜனநாயகவாதி; ராகுல் மீது அருண் ஜெட்லி மகன் பாய்ச்சல்
-
இன்று 10, நாளை 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்
-
சர்ச்சை போஸ்டர்கள்; இரவோடு இரவாக அகற்றிய குஜராத் போலீஸ்!
-
உலகத்தில் தந்தையையே வேவு பார்த்த ஒரே மகன்: அன்புமணி மீது பழி சுமத்தினார் ராமதாஸ்!