திமுக நிர்வாகி கொலை; பழிக்கு பழியாக கொலையாளியின் தந்தை வெட்டிக்கொலை

தேவகோட்டை: சிவகங்கையில் திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக, கொலையாளியின் தந்தை வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கையில் சாமியார்பட்டியைச் சேர்ந்த திமுக இளைஞர் அணி துணை செயலாளர் பிரவீன் என்பவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக சாமியார்பட்டியைச் சேர்ந்த கருணாகரன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், தேவகோட்டை அருகே விளாங்காட்டூரில் ஆடு மேய்க்கச் சென்ற கருணாகரனின் தந்தை கருப்பையாவை பழிக்கு பழியாக இன்று வெட்டிப் படுகொலை செய்தனர். இது தொடர்பாக திருவேகம்பத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கையில் திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக மற்றொரு கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
வாசகர் கருத்து (1)
m.arunachalam - kanchipuram,இந்தியா
02 ஆக்,2025 - 20:39 Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement