லாரி டிரைவர் மீது வழக்கு

செஞ்சி : லாரி மோதி டோல்கேட் சென்சார் கருவியை சேதப்படுத்திய டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

செஞ்சி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் நங்கிலி கொண்டான் கிராமத்தில் டோல்கேட் உள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன், டோல்கேட் 7வது லேன் வழியாக திண்டிவனத்தில் இருந்து செஞ்சி நோக்கி வந்த லாரி மோதியதில், 85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சென்சார் கருவி சேதமானது.

இது குறித்து டோல்கேட் மேலாளர் பிரவீன் கொடுத்த புகாரின் பேரில் கப்ளாம்பாடி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் குமார், 32; மீது செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement