அரசு கல்லுாரியில் பயிற்சி பட்டறை

வானுார் : வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு நாள் வேலை வாய்ப்பு பயிற்சி பட்டறை நடந்தது.

விழாவிற்கு, கல்லுாரி வேலை வாய்ப்பு அதிகாரி காந்திமதி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, வேலை வாய்ப்பு பெறுவதற்கான வழிமுறைகள், அதற்கான சவால்கள் குறித்து பேசினார்.

சிறப்பு விருந்தினராக வானுார் டைடல் பார்க் இயக்குநர் சுரேஷ்குமார், மாணவர்கள் படிக்கும் காலத்தில் தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு, வேலை வாய்ப்புக்கு தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் தமிழ்ச்செல்வன், மணிகண்டன் ஆகியோர் எந்தெந்த பாடப்பிரிவு எடுத்தால் வேலை கிடைக்கும் என்பது குறித்து பேசினர். ஆங்கிலத்துறை தலைவர் ராஜேஸ்வரி ஜெயராணி நன்றி கூறினார்.

Advertisement