மாணவர்கள் பதவியேற்பு

மந்தாரக்குப்பம் : விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் மாணவ தலைவர் பதவியேற்பு விழா நடந்தது.

விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலாயா செகண்டரி பள்ளியில் மாணவர்களிடையே தேர்தல் வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிந்து கொள்ளவும், தலைமை மற்றும் ஆளுமை பண்பை வளர்க்கும் விதமாகவும், மாணவ தலைவர், மாணவத் தலைவி, துணை மாணவ தலைவர் என பல பிரிவுகளில் தேர்தல் நடந்தது.

தேர்தலில் வென்றவர்கள், ஜெயப்பிரியா வித்யாலாயா பள்ளி குழும தலைவர் ஜெய்சங்கர், இயக்குநர் தினேஷ் ஆகியோர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்று பதவியேற்றுக் கொண்டனர்.

Advertisement