மனைவி மாயம் கணவர் புகார் 

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த ஒதியடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் லெனின் மனைவி ரம்யா, 28; இவர், கடந்த 21ம் தேதி வழக்கம் போல் புதுச்சேரியில் தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து லெனின் அளித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து ரம்யாவை தேடி வருகின்றனர்.

Advertisement