சாரண மாணவர்களுக்கு பயிற்சி முகாம் 

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விருத்தாசலம் கல்வி மாவட்ட சாரண, சாரணிய இயக்க மாணவர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் நடந்தது.

விருத்தாசலம் கல்வி மாவட்ட சாரண, சாரணியர் இயக்க மாவட்ட செயலாளர் வீரப்பா தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் செங்கோல் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பு கமிஷனர் பாஸ்கரன் வரவேற்றார்.

விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர் துரைபாண்டியன், தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் புனித வள்ளி வாழ்த்திப் பேசினர். சிறப்பு விருந்தினர் சிதம்பரம் கல்வி மாவட்ட கமிஷனர் வேலாயுதம் பேசினார்.

மாவட்ட அமைப்பு கமிஷனர் சரஸ்வதி நன்றி கூறினார்.

Advertisement