சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் சிபிஎஸ்இ அதிகாரி சடலமாக மீட்பு

1

சென்னை: சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் சிபிஎஸ்இ மண்டல அலுவலர் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் சிபிஎஸ்இ மண்டல அலுவலராக பணிபுரிந்து வந்தவர் மகேஷ்.டி.தர்மாதிகாரி. இவர், கடந்த ஜூலை 7ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு பணியிட மாறுதல் பெற்று வந்தார்.


வழக்கம் போல பணி முடிந்து நேற்று மாலை அண்ணா நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், இன்று பூட்டிய வீட்டுக்குள் மகேஷ் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். பின்னர், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, மகேஷின் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில், தரையில் கிடந்துள்ளார்.

உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement