பொறுப்பற்ற தன்மையின் முகம் ராகுல்: நிர்மலா சீதாராமன் காட்டம்!

20

புதுடில்லி: ''ராகுலின் பொறுப்பற்ற தலைமை, அவரது கட்சியையும், நாட்டையும் காயப்படுத்துகிறது. ஆனால் அவருக்கு அது குறித்து எந்த கவலையும் இல்லை,''
என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், 'தற்போது ரத்து செய்யப்பட்ட விவசாயச் சட்டங்களை நான் எதிர்த்த போது, அருண் ஜெட்லி என்னை மிரட்டினார். நான் அவரைப் பார்த்து, நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன் என்று கூறினேன்' என்றார்.

ராகுல் குற்றச்சாட்டை அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி மறுத்தார். ராகுல் பேசியதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா பதிலடி கொடுத்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது:

பொறுப்பற்ற தன்மைக்கு ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் தான் லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் தான். பொதுவாழ்வில் இருந்தவர்கள் குறித்து, அவர்கள் தற்போது இல்லாத நிலையிலும்கூட அவர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வீசுவது ராகுலுக்கு வழக்கமாகி விட்டது.


மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பற்றிய அவரது பேச்சுக்கள் வெறுக்கத்தக்கவை. நம் நாட்டிற்கு ஒரு வலுவான எதிர்கட்சி தேவை. ராகுலின் பொறுப்பற்ற தலைமையால், அவரது கட்சியும், நாடும் காயப்படுகிறது. ஆனால் அவருக்கு அது குறித்து எந்த கவலையும் இல்லை.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் பதிவிட்டுள்ளார்.


@block_P@ஜெய்சங்கர் கிண்டல்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், ராகுலின் இந்தப் பேச்சை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், "அருண் ஜெட்லி கடந்த 2019ம் ஆண்டு காலமானார். ஆனால், விவசாய சட்டம் 2020ம் ஆண்டு தான் அறிமுகம் செய்யப்பட்டது. மறைந்த தலைவர்களுன் பேசும் திறன் ராகுலிடம் இருக்கும் என்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது. ஒருநாள் தனது தவறுகளுக்கு விளக்கம் கேட்டு, நேருவையும் அவர் தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம்," என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.block_P

Advertisement