கம்மந்துார் கிராமத்தில் பண்ணை பள்ளி முகாம்

செஞ்சி: வல்லம் ஒன்றியம் கம்மந்துார் கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் பண்ணை பள்ளி முகாம் நடந்தது.

இதில் வேளாண்மை துணை இயக்குனர் குமாரி ஆனந்தி ஆய்வு செய்தார். அப்போது நன்மை செய்யும் பூச்சிகள் தீமை செய்யும் பூச்சிகள் குறித்தும், தேவைக்கு அதிகமாக உரம், பூச்சி மருந்து பயன்படுத்துவதை தவிர்க்கவும் அறிவுறுத்தினார்.

மேலும் பூச்சி விரட்டிகள், மண்புழு உரம், மீன் அமிலம் ஆகியவற்றின் பயன்பாடு குறித்தும், நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாப்பது குறித்தும் விளக்கினார். விவசாயிகளுக்கு வேளாண்மை துறை நலத்திட்டங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன், துணை வேளாண்மை அலுவலர் கோவிந்தராஜ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுபாஷ் சந்திரபோஸ், உதை விதை அலுவலர் பிரபாகரன், உதவி வேளாண்மை அலுவலர்கள் தமிழரசி, மீனாட்சி, மஞ்சு, அபிராமி, வாசமூர்த்தி, ஜீவா, பாலாஜி மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Advertisement