அழிவில் கூடை முடையும் தொழில்; காரைக்குடியில் தொழிலாளர்கள்

சாக்கோட்டை, கல்லல் பகுதிகளில் ஏராளமானோர் கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை, நம்பி ஆத்தங்குடி குன்றக்குடி உட்பட பல்வேறு பகுதிகளில் கூடை பின்னும் தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர்.
மூங்கில் கூடைகள் மட்டுமின்றி தைலமர குச்சிகள் மூலம் கூடை செய்து வருகின்றனர்.இதில், புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்களே அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதி களில் தைலம் மரக்காடுகள் அதிகம் உள்ளதால் தைல மர குச்சிகளை சேகரித்து வந்து குன்றக்குடி ஆத்தங்குடி பலவான்குடி உட்பட சுற்றுவட்டார கிராம பகுதியில் கூடை செய்து அங்கேயே விற்பனை செய்கின்றனர்.
அதிகம் விற்பனை செய்யப்பட்ட கூடைகள்,பயன்பாடு குறைவு காரணமாக கூடை பின்னும் தொழிலே அழிவை நோக்கி செல்வதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முருகேசன் கூறுகையில், அதிகம் வளையும் தன்மை கொண்ட தைலம் மரக் குச்சிகள் மூலம் கூடை தயாராகிறது. சிவகங்கை, புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், இத்தொழில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக எடை கொண்டதால், கோழி மற்றும் ஆட்டுக்குட்டிகள் அடைப்பதற்கும், கால்நடைகளுக்கு தீவனம் வைப்பதற்கும் இதனை பயன்படுத்துகின்றனர்.
கோழி, வளர்ப்பு குறைவு காரணமாக தொழில் பெரிதும் பாதித்துள்ளது. தவிர அதிகம் வளையும் தன்மை கொண்ட தைல மரக் குச்சிகளும் தற்போது கிடைப்பது இல்லை. இதனால் இத்தொழில் முடங்கி வருவதோடு, பலரது வாழ்வா தாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.
மேலும்
-
கைத்தட்டல் அவருக்கு சொந்தம் வாங்கித்தருவது நம் வேலை: மோடிக்கு மொழிபெயர்த்தது பற்றி சுதர்சன்
-
தமிழகத்தில் பரவலான மழை; புதுக்கோட்டையில் அதிகம்!
-
ஒரு நாயகன் உதயமாகிறான்...
-
சாதிக்கும் சந்துரு...
-
லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு அச்சம்; வெளியே பூட்டிவிட்டு வீட்டுக்குள் பதுங்கிய இன்ஜினியர்
-
ஓபிஎஸ் என்னை குறை சொல்கிறார்; நான் அவரை குறை சொல்ல மாட்டேன்: நயினார் நாகேந்திரன்