சீர்காழி அருகே தீ விபத்தில் ரூ.30 லட்சம் பொருட்சேதம்

மயிலாடுதுறை:புதுப்பட்டினம் கடை வீதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கடைகள் எரிந்து, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாயின.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புதுப்பட்டினத்தில் சங்கர், 46, என்பவர், டூ - வீலர் பழுது நீக்கும் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை மூடி விட்டு சென்ற நிலையில், நேற்று அதிகாலை அவரது கடை தீப்பற்றி எரிந்தது.

இந்த தீ, அருகில் இருந்த அப்துல் ரகுமான் என்பவரது ஆயுர்வேத மருந்து கடை, ரஞ்சித் என்பவருக்கு சொந்தமான பேக்கரி ஆகியவற்றுக்கும் பரவியது. சீர்காழி தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்தில், சங்கர் கடையில் இருந்த ஏழு டூ - வீலர்கள், பேட்டரிகள், டயர்கள் உட்பட மூன்று கடைகளிலும் இருந்த, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.

புதுப்பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement