தமிழகத்தில் வடமாநிலத்தவர்களுக்கு ஓட்டுரிமை வழங்க கூடாது: சீமான் பேட்டி

1

தேனி:வட மாநிலத்தவர்களுக்கு தமிழகத்தில் ஓட்டுரிமை வழங்க கூடாது. வழங்கினால் அவர்கள் மாநில அரசியல், அதிகாரத்தை தீர்மானிப்பார்கள் என தேனியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

தேனியில் நாம்தமிழர் கட்சி சார்பில் தேவேந்திரகுல வேளாளரை பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடந்தது.

அங்கு நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:

தமிழகத்தில் வடமாநிலத்தவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கினால் அவர்கள் மாநில அரசியலை தீர்மானிப்பார்கள். வட மாநிலத்தினர் அனைவரும் பா.ஜ., வாக்காளர்கள். தமிழகத்தில் சவுகார்பேட்டை, ஈரோடு, பெருந்துறை தமிழர்கள் தொகுதியே இல்லாமல் மாறிவிட்டது.

ஒரேநாடு ஒரே ரேஷன் திட்டமே அதற்காகத்தான். உழைக்கிறான் என்பதற்காக ரேஷன் அட்டை வழங்கினீர்கள் சரி. தேர்தல் என்றால் அவர்கள் ஊருக்கு சென்று ஓட்டு போட வேண்டும். ஹிந்திகாரர்கள் வருகையால் கடைகள், மருத்துவமனைகளில் ஹிந்தி பலகைகள் வைத்துள்ளனர்.

வட மாநிலத்தவர்களை யார் அழைத்து வருகிறார்கள், என்ன பணி, எங்கு தங்குவார்கள் என தமிழக அரசு முன் நுழைவு அனுமதி எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு இங்கு ஓட்டுரிமை வழங்க கூடாது.

தேவேந்திரகுல வேளாளர் பட்டியல் வெளியேற்றம் பல ஆண்டு கோரிக்கை. பட்டியல் பிரிவில் வழங்கும் சலுகையை வெறுக்கிறேன். வழங்க வேண்டியது சலுகை அல்ல உரிமை.

வரும் தேர்தல் நேரத்தில் அழுத்தம் கொடுத்து பட்டியலில் இருந்து வெளியேற முயற்சிப்போம். மத்திய அரசு 3 முறை பட்டியலில் இருந்து வெளியேற்ற கூறி உள்ளது. இதை மாநில அரசு செய்யவில்லை என்றார்.

Advertisement