மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

1

புதுடில்லி: ஆகஸ்ட் 13 க்கு பிறகு மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பதற்கான சட்டப்பூர்வ தீர்மானத்தை பார்லிமென்ட் இன்று அங்கீகரித்துள்ளது.

பார்லிமென்டில் கடந்த ஜூலை 21 முதல் மழைக்கால கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இந்நிலையில் இன்று மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க, ராஜ்யசபா ஒப்புதல் அளித்தது. எதிர்க்கட்சிகளின் முழக்கங்களுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பிரேன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பிப்ரவரியில் ஜனாதிபதி ஆட்சி முதலில் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, ஜனாதிபதி ஆட்சிக்காலம் வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முடிவடையும் நிலையில், மாநிலத்தில் வன்முறை மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மையை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், மேலும் 6 மாதம் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க பார்லியில் முடிவு எடுக்கப்பட்டது.

பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விவகாரத்தில் ஏற்பட்ட கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில், கடந்த வாரம் லோக்சபாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து இன்று ராஜ்யசபாவிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisement