திருமாவின் இன்றைய குறி தேர்தல் கமிஷன்!

36

திருச்சி: தினம், தினம் எதிர்க்கட்சிகளிடம் மட்டுமே கேள்வி கேட்கும் வழக்கம் உள்ள திருமாவளவன், இன்று (ஆகஸ்ட் 5), "பாஜவின் கட்டுப்பாட்டில் தேர்தல் கமிஷன் உள்ளது; அவர்களால் முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியவில்லை" என தெரிவித்தார்.


@1brஇது தொடர்பாக திருச்சியில் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: பீஹாரில் தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதில் ஏராளமான தில்லு முல்லுகள் நடைபெறுவதாக தெரிகிறது.


குறிப்பாக பாஜவுக்கு எதிராக வாக்களிக்கக் கூடியவர்கள் எல்லாரையும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதும், வெளி மாநிலங்களில் இருந்து பலரை பீஹாரில் வாக்காளர் பட்டியலில் சேர்த்தும், அவர்களை ஓட்டளிக்க செய்வது, கடந்த லோக்சபா தேர்தலிலும் செய்திருக்கிறார்கள்.


அதற்கு தேர்தல் கமிஷன் துணை போகிறது என்கிற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் குறிப்பாக இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகிறோம். இதனை பார்லிமென்டில் விரிவாக விவாதிக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை.

ஏற்க மறுக்கிறது!





ஜூலை 21ம் தேதி தொடங்கிய, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில், தொடக்கத்தில் இருந்தே இதனை விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் ஆளும் கட்சி அதனை ஏற்க மறுக்கிறது. அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அவர்கள் ஏன் அதை விவாதிக்க தயங்குகிறார்கள்.

ஜனநாயக விரோதம்




தமிழகத்திலும் அப்படி செய்வதற்கு சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற தகவல்கள் வெளியாகுகின்றன. அவர்கள் இந்தியா முழுவதும் இதனை நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் கமிஷன் இப்படி ஒரு சார்பாக செயல்படுவது, ஜனநாயக விரோதம். இதனால் தேர்தல் கமிஷன் மீதான நம்பகத்தன்மை சிதைகிறது சிதறுகின்றன.


தில்லு முல்லு




ஜனநாயகத்தை நம்ப கூடியவர்களாக இருந்தால், ஆளுங்கட்சியினர் இதில் தில்லுமுல்லு ஏதும் நடக்கவில்லை என்று உறுதியாக நம்பினால் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதுதான் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தேர்தல் கமிஷன் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது என்று சந்தேகம் வலுத்திருக்கிறது.


அவர்கள் சுதந்திரமாக இயங்கவில்லை. பாஜவின் முழுமையான கட்டுப்பாட்டில் தேர்தல் கமிஷன் சிக்கி உள்ளது. எந்த தில்லு முல்லையும் அவர்கள் இன்றைக்கு செய்ய தயாராக இருக்கிறார்கள். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement