உத்தராகண்டில் 2 இடங்களில் மேகவெடிப்பு: 4 பேர் பலி; 50 பேரின் கதி என்ன?

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பு காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால், தாராலி பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. 4 பேர் உயிரிழந்தனர். 50 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தாராலி அருகே சுகி டாப் என்ற இடத்திலும் மேகவெடிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஹிமாச்சல், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் சேதம் அடைந்துள்ளன. முக்கிய வழித்தடங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.
மீட்புப் பணி
இந்நிலையில் உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியின் தாராலி பகுதியில் கீர் கங்கை நதி பகுதிகளில் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், அந்தப் பகுதியில் பல காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால், அந்த பகுதிகளில் ஒரு சில வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. பல கட்டடங்களில் சேதம் ஏற்பட்டது. பல வீடுகள் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகின்றன. ஒரு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது.




போலீசார் எச்சரிக்கை
பொது மக்கள் நதிக்கரையோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். பொது மக்கள் மற்றும் கால்நடைகள் நதிக்கரையோரங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
மீண்டும்
இதனிடையே, தாராலி அருகே சுகி டாப் என்ற இடத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பொது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமித்ஷா ஆலோசனை
@quote@இது குறித்து தகவல் அறிந்ததும் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். quote
மீட்புப் படை விரைவு
மீட்புபணிகளில் உதவி செய்ய இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்புப் படையைச்(ஐடிபிபி) சேர்ந்த வீரர்கள் 16 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.12வது பட்டாலியனைச் சேர்ந்த மற்றொரு குழுவினரும் சம்பவ இடத்திற்க சென்றுள்ளதாக ஐடிபிபி தெரிவித்துள்ளது.
இதனிடையே,மனேரா,பட்கோட் மற்றும் டேராடூனில் இருந்து தலா ஒரு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். மேலும், இரண்டு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக என்டிஆர்எப் கூறியுள்ளது.
@block_Y@
முதல்வர் புஷ்கர் சிங் கூறுகையில், உத்தரகாசியின் தாராலியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த செய்தி கவலையையும் வேதனையையும் அளிக்கிறது. மீட்புப் பணிகளில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். உயர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளேன். அனைவரும் பாதுகாப்புடன் மீட்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.block_Y
@block_G@
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க 150 ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 15 முதல் 20 பேர் வரை மீட்கப்பட்டு இருக்கலாம் என ராணுவம் தெரிவித்துள்ளது.block_G
@block_P@
பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் ' உத்தரகாசியின் தாராலியில் மேகவெடிப்பு காரணமாக உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இதனுடன் பாதிக்கப்பட்ட மக்கள் நல்வாழ்விற்கும் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.
முதல்வர் புஷ்கர் தமியுடன் பேசி, அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து கேட்டறிந்தேன்.
மாநில அரசின் கண்காணிப்பின் கீழ், நிவாரணம் மற்றும் மீட்புப் படையினர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். மக்களுக்கு உதவ கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் தவற விட மாட்டோம்.' எனத் தெரிவித்துள்ளார்.block_P
ராகுல் இரங்கல்
ராகுல் வெளியிட்ட அறிக்கையில், 'தாராலியில் மேகவெடிப்பு ஏற்படுத்திய பேரழிவால், சிலர் உயிரிழப்பு மற்றும் பலர் காயம் என வெளிவரும் தகவல்கள் மிகவும் வருத்தத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது இரங்கல் தெரிவிக்கிறேன். காணாமல் போனவர்கள் விரைவில் மீட்கப்பட வேண்டும். நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் துரித கதியில் நடத்த வேண்டும். மீட்புப்பணிகளில் மாவட்ட நிர்வாகத்துக்கு காங்கிரஸ் தொண்டர்கள் இணைந்து செயல்படுவதுடன், தேவையான உதவிகளை செய்ய வேண்டும்' எனத்தெரிவித்துள்ளார்.


மேலும்
-
காஞ்சி நெசவாளர் தேசிய விருதுக்கு தேர்வு
-
ஹோண்டா 'சி.பி., 125 ஹார்னெட்' யூ.எஸ்.டி., போர்க் உள்ள ஒரே 125 சி.சி., பைக்
-
'சைபர்ஸ்டர்' ரோட்ஸ்டர் இ.வி., உலகின் வேகமான எம்.ஜி., கார்
-
இந்தியாவுக்கு மூன்று புதிய கார்கள்: நிஸான்
-
பக்தர்கள் ஏமாற வேண்டாம்: திருச்செந்துாரில் அறிவிப்பு
-
'எம்.டி., - 15' பைக்கில் 'டி.எப்.டி.,' டிஸ்ப்ளே