நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்; 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னை: நீலகிரி, கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு, இன்று (ஆகஸ்ட் 5) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த ஏழு நாட்களுக்குப் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று கன முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தேனி, தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், திண்டுக்கல், திருப்பூர் கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (ஆகஸ்ட் 6)
கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரையில், இன்று (ஆகஸ்ட் 5 ) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்ப்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




மேலும்
-
காஞ்சி நெசவாளர் தேசிய விருதுக்கு தேர்வு
-
ஹோண்டா 'சி.பி., 125 ஹார்னெட்' யூ.எஸ்.டி., போர்க் உள்ள ஒரே 125 சி.சி., பைக்
-
'சைபர்ஸ்டர்' ரோட்ஸ்டர் இ.வி., உலகின் வேகமான எம்.ஜி., கார்
-
இந்தியாவுக்கு மூன்று புதிய கார்கள்: நிஸான்
-
பக்தர்கள் ஏமாற வேண்டாம்: திருச்செந்துாரில் அறிவிப்பு
-
'எம்.டி., - 15' பைக்கில் 'டி.எப்.டி.,' டிஸ்ப்ளே