கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேரலாம்; ஓபிஎஸ் கேள்விக்கு நயினார் பதில்

அருப்புக்கோட்டை: கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேரலாம் என்று ஓபிஎஸ் விலகல் குறித்த நிருபர்கள் கேள்விக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.


@1brஅருப்புக்கோட்டையில் அவர் அளித்த பேட்டி;


ஓபிஎஸ் எங்கள் கூட்டணியில் இருக்கும் போது அவரை பற்றி சொல்லலாம். கூட்டணியை விட்டு விலகி போன பிறகு, அதுபற்றி பேசினால், தனிப்பட்ட நபரின் கருத்தாக அமையும். அதனால் அவர் மீது நான் எந்த கருத்தையும் சொல்ல முடியாது.


தமிழகத்தில் தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்கள் மட்டுமல்ல, பாலியல் வன்கொடுமைகள் நடக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 3 படுகொலைகள் நடந்தது.தென்மாவட்டங்களில் நிறைய படுகொலைகள் நடக்கின்றன.


இதற்கு என்ன காரணம் என்றால், தமிழகத்தில் போதை பொருள் பயன்பாடு அதிகம் உள்ளது. சொத்து வரி அதிகமாக உயர்த்தி உள்ளனர். மின்கட்டணம் உயர்த்தி உள்ளனர். தொழில் வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த அரசு வீழ்த்தப்பட வேண்டிய அரசு.


இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேட்டியளித்தார். அப்போது குறுக்கிட்ட ஒரு நிருபர், ஓபிஎஸ்சை மீண்டும் கூட்டணியில் சேர்க்க முயற்சி செய்வீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேர்ந்து கொள்ளலாம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றார்.

Advertisement