ஆக., 17ல் பா.ஜ., 'பூத்' கமிட்டி மாநாடு

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, பா.ஜ., தயாராகி வருகிறது. அதன்படி, மாநிலம் முழுதும், 'பூத்' எனப்படும் ஓட்டுச்சாவடி வாரியாக, தலா 12 நிர்வாகிகள் அடங்கிய பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அவற்றை, கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், தென் மாவட்டங்களில் உள்ள பா.ஜ., பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு, வரும் 17ம் தேதி, திருநெல்வேலி மாவட்டத்தில் நடக்கிறது.

அந்த மாநாட்டுக்கு பின், தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன், தமிழகம் முழுதும் சட்டசபை தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து, கட்சி நிர்வாகிகளை சந்தித்து, தேர்தல் பணிகளை வேகப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

Advertisement