மரக்கன்றுகள் நடும் விழா

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ஒன்றியம் வேடர் புளியங்குளம் ஊராட்சி சகாயம் நகரில் காட்டுநாயக்கர் சமூக 33 குடும்பத்தினருக்கு பழங்குடிகள் மேம்பாட்டு திட்டம் சார்பில் வீடுகள் வழங்கப்பட்டது.

அங்கு நடந்த புதுமனை புகுவிழாவில் திருநகர் பக்கம் ஊர்வனம், மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை சார்பில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. காட்டு நாயக்கர் சமூக தலைவர் முருகன், அமீரகம் தமிழ் மக்கள் மன்ற தலைவர் சிவக்குமார்தேவராஜ், ஆசிரியர் ஹரிபாபு, அன்ன வயல் காளிமுத்து, முத்து அழகேசன், திருநகர் பக்கம் தங்கப்பாண்டி பங்கேற்றனர். வேங்கை, புங்கன், புன்னை, பூவரசு, மந்தாரை மரக்கன்றுகள் நடப்பட்டது.

Advertisement