108 அடி உயர கோபுரத்துடன் காளிகா துர்கா பரமேஸ்வரி கோவில்

பெங்களூரு நகரில் பழங்கால கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஏராளமான தலைசிறந்த கோவில்கள் உள்ளன. இதில் ஒன்று, வித்யாரண்யபுராவில் உள்ள காளிகா துர்கா பரமேஸ்வரி கோவில். இக்கோவில் துர்கா பரமேஸ்வரிக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தால், பக்தர்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னை நீங்கி, மகிழ்ச்சியாக இருப்பர் என்பது நம்பிக்கை.
கோவிலின் நுழைவு வாயில் கோபுரம் 108 அடி உயரத்துடன், கம்பீரமாக காட்சி அளிக்கிறது. துாரத்தில் இருந்து பார்க்கும் போது, கோபுரம் பிரமாண்டமாக இருக்கும்.
கோவிலிலுக்குள் விநாயகர், கிருஷ்ணர், சுப்பிரமணிய சாமி, நரசிம்ம சாமி, விஜய துர்கா, சனீஸ்வரர், நவக்கிரகம், நவதுர்கா தேவிக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இதனால் கோவிலை ஸ்வேத சேத்ரா என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். கோவிலின் கட்டட கலை கலாசாரம், பராம்பரியத்துடன் கலந்து உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, ஆடை கட்டுப்பாடுகள் உள்ளன.
கோவிலின் நடை தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும், மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் திறந்து இருக்கும். மதியம் 12:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரையும்; இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தினமும் காலை 7:30 மணிக்கு பூஜை, மஹா மங்களாரத்தி நடக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் மஹா அபிஷேகம்; அமாவாசை நாட்கள், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்று கிழமைகளில் ராகு கால பூஜையும் நடக்கிறது.
வித்யாரண்யபுரா 11வது கிராஸ் பகுதியில், கோவில் அமைந்து உள்ளது. மெஜஸ்டிக், சிவாஜி நகரில் இருந்து வித்யாரண்யபுராவுக்கு அடிக்கடி பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- நமது நிருபர் -
மேலும்
-
நாமகிரிப்பேட்டையில் விபரீதம்; 3 மகள்களை கொன்று தந்தை தற்கொலை
-
ஐகோர்ட் உத்தரவால் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்... ஒரு நாள் தள்ளிவைப்பு! முதல்வர் தலைமையில் இன்று மீண்டும் பேச்சு நடக்குமா?
-
சித்தர்கள், நாயன்மார்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும்: சத்குரு
-
டில்லி செங்கோட்டை வளாகத்திற்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது
-
பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் காலமானார்; திரையுலகம் கண்ணீர் அஞ்சலி
-
காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமிரக்க வேண்டும்; பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் பிரதமர் தீவிரம்