மீண்டும் ரூ.75 ஆயிரத்தை நெருங்கியது; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.74,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.75 ஆயிரத்தை நெருங்குகிறது.
தமிழகத்தில் கடந்த ஜூலை 23ம் தேதி தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அன்று ஒரு சவரன் தங்கம் வரலாற்றில் முதல் முறையாக ரூ.75,040க்கு விற்பனையானது. அதன் பிறகு மறுநாளில் இருந்தே தங்கம் விலை குறைய தொடங்கியது. தற்போது மீண்டும் உயர தொடங்கி உள்ளது.
நேற்று சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.74,360க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.9,295க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.74,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,370க்கு விற்பனை ஆகிறது. மீண்டும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.75 ஆயிரத்தை நெருங்குகிறது.
மேலும்
-
சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்; ராகுலை சாடிய மோடி
-
"யார் உண்மை இந்தியர் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்" - பிரியங்கா கோபம்
-
மெக்சிகோ சிறையில் கைதிகளுக்குள் கலவரம்; மோதலில் 7 பேர் அடித்துக் கொலை
-
தர்மஸ்தலா மரணங்கள்; 11வது இடத்திலும் மனித எலும்பு கூடுகள் தோண்டியெடுப்பு
-
நம் அறிக்கைகளை யாரும் படிக்கவில்லை: ஐ.நா., ஆதங்கம்
-
பிரதமரின் உதவித்தொகை 38,576 விவசாயிகளுக்கு மறுப்பு