"யார் உண்மையான இந்தியர் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்" - பிரியங்கா கோபம்

புதுடில்லி: யார் உண்மையான இந்தியர் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம் என காங்., எம்பி பிரியங்கா கூறியுள்ளார். தனது சகோதரருமான ராகுல் பேச்சு தவறுதலாக திரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சீன விவகாரம் தொடர்பாக இந்திய ராணுவத்தை தவறுதலாக விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் , ராகுலை கடுமையான கேள்விகளால் அவரை சங்கடத்திற்குள் ஆளாக்கினர். மத்திய அரசும் ராகுலின் பேச்சுக்கு நேற்று கண்டனம் தெரிவித்தது. ராகுல் குறித்தும் சமூகவலை தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் பார்லி., வளாகத்தில் பேட்டி அளித்த பிரியங்கா கூறுகையில்;
@block_P@
எனது சகோதரர் இந்திய ராணுவத்தின் மீது அதீத மரியாதை கொண்டவர். எப்போதும் அவர் குறைத்து பேச மாட்டார். அவர் எதுவும் தவறாக பேசவில்லை. இவர் ஒரு எதிர்கட்சியில் தலைவராக கேள்வி எழுப்ப உரிமை உண்டு. அரசுக்கு சவால் விடும் வகையில் கேள்வி கேட்பது அவரது கடமை. அந்த அடிப்படையிலேயே சீன விவகாரம் குறித்து பேசினார். ஆனால் அவரது கருத்து தவறுதலாக திரித்து பேசப்படுகிறது. block_P
@quote@மேலும் யார் உண்மையான இந்தியன் என்பதை மதிப்பிற்குரிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஒன்றும் முடிவு செய்ய வேண்டாம். quoteஇவ்வாறு பிரியங்கா கூறினார்.











மேலும்
-
ஆன்லைன் கேமிங்: இந்திய பயனர் விவரங்கள் இணையத்தில் கசிவு
-
மீண்டும் மீண்டும் முளைக்கும் ஆபாச வீடியோக்கள்: சென்னை உயர்நீதிமன்றம் கவலை
-
பாகிஸ்தானின் எல்லைக்குள் கூட பயங்கரவாதிகள் ஒளிய முடியாது; முப்படை தலைமை தளபதி சவுகான் பேச்சு
-
அமெரிக்கா உடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது ரஷ்யா!
-
பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க இந்திய கடற்படை, விமானப்படை மும்முரம்
-
திருமாவின் இன்றைய குறி தேர்தல் கமிஷன்!