நம் அறிக்கைகளை யாரும் படிக்கவில்லை: ஐ.நா., ஆதங்கம்

நியூயார்க்: உலக நாடுகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், செலவுகளை குறைப்பதற்கும் வழிகளைத் தரும் வகையில் தயாரிக்கப்படும் ஐ.நா., சபையின் அறிக்கைகள் அதிகம் படிக்கப்படுவதில்லை என்று, அந்த சபை ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் அனடோனியோ குட்டரெஸ், சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ஐ.நா., சபை, 240 அமை ப்புகளை உள்ளடக்கிய 27,000 கூட்டங்களை கடந்த ஆண்டு நடத்தியது. இது தொடர்பாக, 1,100 அறிக்கைகள் வெளியிட்டப்பட்டன. ஆனால், இந்த அறிக்கைகள் பரவலாக படிக்கப்படவில்லை.
ஐ.நா., பொதுச்சபை அல்லது பாதுகாப்பு கவுன்சில் போன்ற அமைப்புகளால் வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான அறிக்கைகளை, ஊழியர்கள் தீவிர கவனம் செலுத்தி தயாரிக்கின்றனர்.
இதில், 5 சதவீத அறிக்கைகள் மட்டுமே அதிகபட்சமாக 5,500 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளன.
அதேநேரம், 20 சதவீத அறிக்கைகள் 1,000 முறை கூட பதிவிறக்கம் செய்யப்படவில்லை. இனி குறைந்த எண்ணிக்கையில் கூட்டங்கள் நடத்தி, தரமான அறிக்கைகளை வெளியிடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஆன்லைன் கேமிங்: இந்திய பயனர் விவரங்கள் இணையத்தில் கசிவு
-
மீண்டும் மீண்டும் முளைக்கும் ஆபாச வீடியோக்கள்: சென்னை உயர்நீதிமன்றம் கவலை
-
பாகிஸ்தானின் எல்லைக்குள் கூட பயங்கரவாதிகள் ஒளிய முடியாது; முப்படை தலைமை தளபதி சவுகான் பேச்சு
-
அமெரிக்கா உடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது ரஷ்யா!
-
பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க இந்திய கடற்படை, விமானப்படை மும்முரம்
-
திருமாவின் இன்றைய குறி தேர்தல் கமிஷன்!