டில்லியில் பிலிப்பைன்ஸ் அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு; ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

1


புதுடில்லி: டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ்க்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர்.


தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளுடன் நல்ல உறவை இந்தியா கொண்டுள்ளது. அந்த வகையில், பிலிப்பைன்ஸ் உடனான துாதரக உறவு, 75 ஆண்டை நிறைவு செய்கிறது. இதையொட்டியும், இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் முதல்முறையாக இந்தியா வந்துள்ளார்.

நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பிலிப்பைன்ஸ் அதிபரை நேற்று சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார். இந்நிலையில், இன்று ஜனாதிபதி மாளிகையில், பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ்க்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவரை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர்.



இதை தொடர்ந்து, பிரதமர் மோடியை பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் சந்தித்து பேச உள்ளார். அப்போது இருநாட்டு தலைவர்களும் பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

Advertisement