தங்க நகை வியாபாரியிடம் 1.5 கிலோ தங்கம் வழிப்பறி

காரைக்குடி: காரைக்குடியில் தங்க நகை வியாபாரியிடம் 1.5 கிலோ தங்கம் வழிப்பறி செய்யப்பட்டு உள்ளது.

மதுரை பகுதியைச் சேர்ந்த தங்க நகை வியாபாரி விஜயராஜா (40) . இவர் மதுரையில் இருந்து தங்க நகைகளை காரைக்குடியில் உள்ள தங்க நகை வியாபாரிகளிடம் விற்பனை செய்வது வழக்கம். அந்தவகையில் நேற்று மதுரையில் இருந்து 1.5 கிலோ தங்க நகைகளை காரைக்குடியில் உள்ள நகை வியாபாரிகளிடம் விற்பனை செய்வதற்காக பஸ்சில் சென்று உள்ளார்.

காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் இறங்கி நடந்து சென்ற போது இவரை பின் தொடர்ந்து காரில் வந்த மர்ம நபர்கள் பையில் கொண்டு வந்த 1.5 கிலோ தங்க நகைகளை வழிப்பறி செய்துவிட்டு தப்பினர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement