தன்வந்திரி பெருமாள் கோவில் திருப்பணிக்கு உதவ வேண்டுகோள்
சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், கூழிபிறை கிராமத்தில் கட்டப்பட்டு வரும் தன்வந்திரி பெருமாள் கோவில் திருப்பணிக்கு உதவுமாறு, 'தன்வந்திரி பெருமாள் அறக்கட்டளை' வேண்டுகோள் விடுத்துள்ளது.
கூழிபிறை கிராமத்தில் தன்வந்திரி பெருமாள் கோவில் கட்டப்பட்டு வருகிறது. 300 சதுர அடி பரப்பில், 12 அடி உயரத்தில், கருங்கல் கற்களால் கருவறை, திருவறை எழுப்பப்பட்டுள்ளது.
திருவறை நிலை வாசலில், கற்களால் வடிக்கப்பட்ட கஜலட்சுமி தாயார் அருள்புரிகிறார்.
கருவறை மீது, மூன்று நிலை விமானம், 42 அடி உயரத்திற்கு கட்டப்பட்டுள்ளது. அதில், 48 வகையான சுதை வேலைகள் நடந்து வருகின்றன. வண்ணப் பூச்சில், ஒற்றை கலச விமானத்துடன் இக்கோபுரம் ஜொலிக்க உள்ளது.
தன்வந்திரி பெருமாள், தாமரை பீடத்துடன், 84 அங்குல உயரத்தில் உருவாகி வருகிறார். 600 சதுர அடி பரப்பில் மகா மண்டபம், ஒற்றை தேக்கில் நெடிதுயர்ந்த கொடி மரம் மற்றும் கதவுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கோவில் வளாகத்தில் நுாலகமும் அமைக்கப்பட உள்ளது.
கருடாழ்வாருக்கும், ஆஞ்சநேயருக்கும் தனித்தனி சன்னிதிகள் கட்டப்பட உள்ளன. மடப்பள்ளி, ஓய்வறைகள், மூலிகை தோட்டமும் அமைய உள்ளன. இந்த பணிகளுக்காக, பக்தர்களிடம் இருந்து நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
திருப்பணிக்கு, 25,000 ரூபாய் மற்றும் அதற்கு மேல் நன்கொடை அளிப்பவர்களின் பெயர், கல்வெட்டில் இடம் பெறும். திருப்பணியில் பங்கு பெற விரும்புவோர், 'தன்வந்திரி பெருமாள் அறக்கட்டளை, இந்தியன் வங்கி, கூழிபிறை - -622402, SB 7492523213, IFSC IDIB000K170' என்ற வங்கி கணக்கில் நன்கொடை அனுப்பலாம்.
மேலும் விபரங்களுக்கு, சீத்தலைச்சாத்தன் - 98424 90447, வாட்ஸாப் 93858 86315; ராமசாமி -93439 36609, லட்சுமணன் 99444 36815 மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
-
சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்; ராகுலை சாடிய மோடி
-
"யார் உண்மை இந்தியர் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்" - பிரியங்கா கோபம்
-
மெக்சிகோ சிறையில் கைதிகளுக்குள் கலவரம்; மோதலில் 7 பேர் அடித்துக் கொலை
-
தர்மஸ்தலா மரணங்கள்; 11வது இடத்திலும் மனித எலும்பு கூடுகள் தோண்டியெடுப்பு
-
நம் அறிக்கைகளை யாரும் படிக்கவில்லை: ஐ.நா., ஆதங்கம்
-
பிரதமரின் உதவித்தொகை 38,576 விவசாயிகளுக்கு மறுப்பு