உலகளாவிய விரிவாக்கத்தை ஊக்குவிக்க ஜோய் ஆலுக்காஸ் -- எமிரேட்ஸ் என்.பி.டி., ஒப்பந்தம்

சென்னை: உலகளாவிய விரிவாக்கத்தை ஊக்குவிக்க, ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம், மத்திய கிழக்கு, வட ஆப்ரிக்கா மற்றும் துருக்கிய பிராந்தியத்தில், முன்னணி வங்கி குழுவான, எமிரேட்ஸ் என்.பி.டி., வாயிலாக, 1,188 கோடி ரூபாய் பணி மூலதன ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் முக்கிய சர்வதேச சந்தைகளில், ஜோய் ஆலுக்காசின் நீண்டகால விரிவாக்கத் திட்டங்களை ஆதரிக்கிறது. இது குறித்து, ஜோய் ஆலுக்காஸ் குழுமத் தலைவர் ஜோய் ஆலுக்காஸ் கூறியதாவது:
பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட முக்கிய சர்வதேச சந்தைகளில், ஜோய் ஆலுக்காஸை விரிவுபடுத்துவதற்கான எங்கள் பயணத்தில் இந்த வசதி குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. எமிரேட்ஸ் என்.பி.டி., எங்கள் உலகளாவிய சில்லரை விற்பனை உத்தியின் பின்னணியில் உள்ள அளவு, லட்சியம் மற்றும் ஒழுக்கத்தை புரிந்து கொள்ளும் ஒரு நம்பகமான கூட்டாளியாக இருந்து வருகிறது.
நெகிழ்வு தன்மை மற்றும் தொலைநோக்குடன் கட்டமைக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், ஜுவல்லரி துறையில் ஒரு புதிய அளவுகோலை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார். எமிரேட்ஸ் என்.பி.டி.,யின் ஹோல்சேல் பேங்கிங் குழு தலைவர் அகமது அல் காசிம் கூறுகையில், ''ஜோய் ஆலுக்காசுக்கு இந்த செயல்பாட்டு மூலதன வசதியை வழங்குவது, எமிரேட்ஸ் என்.பி.டி.,யின் துரிதமான பன்முகத் தன்மை கொண்ட வாடிக்கையாளர்கள், சுற்றுச்சூழல் அமைப்பின் சரியான தேவைகளை பூர்த்தி செய்யும்.
துறை சார்ந்த பரிவர்த்தனைகளை உருவாக்கும் திறனை காட்டுகிறது,'' என்றார்.
மேலும்
-
சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்; ராகுலை சாடிய மோடி
-
"யார் உண்மை இந்தியர் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்" - பிரியங்கா கோபம்
-
மெக்சிகோ சிறையில் கைதிகளுக்குள் கலவரம்; மோதலில் 7 பேர் அடித்துக் கொலை
-
தர்மஸ்தலா மரணங்கள்; 11வது இடத்திலும் மனித எலும்பு கூடுகள் தோண்டியெடுப்பு
-
நம் அறிக்கைகளை யாரும் படிக்கவில்லை: ஐ.நா., ஆதங்கம்
-
பிரதமரின் உதவித்தொகை 38,576 விவசாயிகளுக்கு மறுப்பு