பாகிஸ்தானின் எல்லைக்குள் கூட பயங்கரவாதிகள் ஒளிய முடியாது; முப்படை தலைமை தளபதி சவுகான் பேச்சு

1

புதுடில்லி: "பாகிஸ்தானின் எல்லைக்குள் கூட இனி பயங்கரவாதிகள் ஒளிய முடியாது” என முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.



இது குறித்து பாதுகாப்புத்துறை தொடர்பான கூட்டத்தில், அனில் சவுகான் பேசியதாவது: நவீன போர்கள் குறுகியதாகவும், இலக்கு வைக்கப்பட்டதாகவும், முறையான அறிவிப்புகள் இல்லாமல் அரசியல் ரீதியாக நோக்கம் கொண்டதாகவும் மாறி வருகிறது. அதிகாரப் பூர்வமாக போரை அறிவிக்காமலேயே அரசியல் நோக்கங்களை அடைய பலத்தை பயன்படுத்த நாடுகள் அதிகளவில் முனைகின்றன.

போரும் அரசியலும் நெருங்கிய தொடர்புடையவை. அரசியல் நோக்கங்களை அடைவதற்காகவே போர்கள் பெரும்பாலும் நடத்தப் படுகின்றன. இன்று, ஆபரேஷன் சிந்தூர் போன்ற மிகக் குறுகிய, துல்லியமான போர்களை நாம் காண்கிறோம்.

ஒளிய முடியாது





பாகிஸ்தானின் எல்லைக்குள் கூட இனி பயங்கரவாதிகள் ஒளிய முடியாது. அவர்கள் குறிவைக்கப்படுவார்கள். எந்தவொரு வன்முறைச் செயலுக்கும் எதிராக நாங்கள் தீர்க்கமாகச் செயல்படத் தயாராக உள்ளோம்.இனி நாம் 500 கிலோ குண்டுகளை மட்டுமே நம்பியிருக்க முடியாது. கனமான, மிகவும் பயனுள்ள ஏவுகணைகள் மற்றும் மிகவும் துல்லியமான இலக்குகளுக்கான நேரம் வந்துவிட்டது.

யதார்த்தம்




மோதல்கள் இனி முறையான அறிவிப்புகளுடன் தொடங்காமல் போகலாம். இன்றைய கால சூழ்நிலைகளின் எதார்த்தம் இதுதான். இந்தியப் படைகளால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் அதிவேக துல்லியமான தாக்குதல் ஆகும்.போருக்கும் அமைதிக்கும் இடையிலான வேறுபாடு குறைந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement