வத்திராயிருப்பு கோயிலில் பாலாலயம்

வத்திராயிருப்பு, : வத்திராயிருப்பு அழகிய மணவாள பெருமாள் கோயிலில் ரூ. 3.31 கோடி மதிப்பில் திருப்பணிகள் செய்வதற்கான பாலாலயம் நடந்தது.

வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பல நூற்றாண்டு பழமையான அழகிய மணவாளப் பெருமாள் கோயில் உள்ளது. கோயிலில் அபிஷேக வசந்த, குடவரை, ஏகாதசி மண்டபங்கள், மடப்பள்ளி, சிதலமடைந்து இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்தது.

இந்நிலையில் இக்கோயிலில் ரூ 3.31 கோடி மதிப்பில் திருப்பணிகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான பாலாலய பணிகளை செயல் அலுவலர் ஜோதிலட்சுமி துவக்கி வைத்தார். அழகி மணவாள பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி , பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புதிய கட்டுமான பணிகள் பூமி பூஜையுடன் துவங்கியது.

நிகழ்ச்சியில் ஆண்டாள் கோயில் அர்ச்சகர் முத்து பட்டர், பக்தர் சபா தலைவர் குமார கிருஷ்ணன், ஸ்தபதி குரு முருகன், அறநிலையத்துறை கோட்ட பொறியாளர் வெங்கடேஷ் பிரபு, உதவி பொறியாளர் விக்னேஷ் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement