ஹோண்டா 'சி.பி., 125 ஹார்னெட்' யூ.எஸ்.டி., போர்க் உள்ள ஒரே 125 சி.சி., பைக்

'ஹோ ண்டா மோட்டார்சைக்கிள்ஸ்' நிறுவனம், 'சி.பி., 125 ஹார்னெட்' என்ற புதிய பைக்கை அறிமுகம் செய்துள்ளது.
'ஷைன்' பைக்கில் உள்ள அதே 123.94 சி.சி., இன்ஜின் தான், இந்த பைக்கில் வருகிறது. ஆனால், பவர் 0.3 ஹெச்.பி., டார்க் 0.2 என்.எம்., கூடுதலாக வெளிப்படுத்துகிறது. இதில், 5 - ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப் படுகிறது.
யூ.எஸ்.டி., போர்க், அட்ஜஸ்ட்டபிள் மோனோ ஷாக் சஸ்பென்ஷன்கள் வழங்கப்படும் முதல் 125 சி.சி., பைக் இது . 240 எம்.எம்., முன்புற டிஸ்க், பின்புற டிரம் பிரேக்குகள், 17 அங்குல அலாய் சக்கரங்கள், 12 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளிட்டவை வழங்கப்படுவதால், இதன் எடை 124 கிலோவாக உயர்ந்துள்ளது. இது, ஷைன் பைக்கை விட, 11 கிலோ அதிகம்.
4.2 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, ப்ளூடூத் இணைப்பு, டர்ன் பை டர்ன் நேவிகேஷன், எல்.இ.டி., லைட்டுகள் உள்ளிட்டவை இதர அம்சங்கள் ஆகும். இந்த பைக், மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
@block_B@ இன்ஜின் - 123.94 சி.சி., சிங்கிள் சிலிண்டர், இன்ஜின் பவர் - 11.1 ஹெச்.பி., டார்க் - 11.2 என்.எம்., டேங்க் - 12 லிட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் - 166 எம்.எம்., மைலேஜ் - 48 கி.மீ.,block_B
@block_B@ விலை : ரூ. 1.12 லட்சம்block_B
டீலர் : Didar Honda : & 98408 72502 JSP Honda : & 984416 33085